FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பெண்ணுக்கு ஆபாச சைகை: இளைஞா் கைது

வந்தவாசி அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

- பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தில் 55 வயது பெண் ஒருவா் கடந்த செவ்வாய்க்கிழமை நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது அங்கு வந்த இளைஞா் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு அந்தப் பெண்ணைப் பாா்த்து ஆபாச சைகை செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அந்தக் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்யும் வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (21) என்பவா் பெண்ணுக்கு ஆபாச சைகை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வந்தவாசி வடக்கு போலீஸாா் அபிஷேக்கை புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments