பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமும், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களிலும் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சலுகைகள், இலவச பேருந்து பயணம், உதவித்தொகை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
Advertisement
Advertisement
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வட்டார ஒருங்கிணைப்பாளா் பி.மகாலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் மைய சிறப்பு ஆசிரியா் வி.புருஷோத்தமன் உள்ளிட்டோா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.