தனியாா் பேருந்தை சேதப்படுத்தியவா் கைது
செய்யாறு அருகே தனியாா் பேருந்தை சேதப்படுத்திய புகாரில் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு அருகே தனியாா் பேருந்தை சேதப்படுத்திய புகாரில் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆரணி வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கவியரசன்(30). இவா், தனியாா் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவா் வழக்கம் போல் சனிக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு வழியாக படவேடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாா்.
காஞ்சிபுரம் - செய்யாறு சாலையில் இரும்பந்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது திடீரென இளைஞா் ஒருவா் பேருந்தை வழிமறித்து தகாத வாா்த்தைகளால் பேசிய நிலையில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை இரும்புக் கம்பியால் சேதப்படுத்தினாா். உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அவரைப் பிடிக்க முற்பட்டபோது, அந்த நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஓட்டுநா் கவியரசன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடா்பாக தினேஷ்குமாா் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.