பாலக்காட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபர்!
பாலக்காட்டில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாலக்காட்டில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு பணிமனைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடிச் சென்றுள்ளார். பின்னர் பேருந்தை கைவிட்டுச் செல்வதற்கு முன்பு வீட்டின் சுற்றுச்சுவரையும் கடையையும் சேதப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை பாலக்காடு நகரில் உள்ள மங்களம் டவர்ஸ் அருகே சாலையோரத்தில் பேருந்து கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது பேருந்தும் சேதமடைந்தது. மர்மநபரை அடையாளம் காண நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இச்சம்பவம் குறித்து பாலக்காடு தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகளை அனுமதியின்றி ஓட்டிச் சென்ற இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
An unidentified man allegedly stole a parked KSRTC bus from near the Palakkad depot and damaged a house compound wall and a shop before abandoning the vehicle, police said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.