உ.பி.: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜஜௌலி கிராமத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் சிலையை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்ததும் அப்பகுதியில் மக்கள் கூடியதால் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து விரைந்த போலீஸார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். அம்பேத்கர் சிலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்ததாக வட்ட அதிகாரி ஜனேஷ்வர் பிரசாத் பாண்டே தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பின்னர், அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அதே இடத்தில் அம்பேத்கரின் புதிய சிலை நிறுவப்பட்டதாக பாண்டே கூறினார். மேலும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Unidentified persons allegedly vandalised a statue of Dr B R Ambedkar in a village here, police said on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.