FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜன நாயகன் படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் குறித்த பார்வை உள்ளது: வன்னி அரசு

ஜன நாயகன் படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் குறித்த பார்வையும் உள்ளது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளது பற்றி...

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் வன்னி அரசு - படம் - எக்ஸ்
பகிர்:

ஜன நாயகன் படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் குறித்த பார்வையும் உள்ளது என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ் அரசியலிலிருந்து விலகியது குறித்து பேசிய அவர், ”ராமதாஸின் உடல்நிலை கருதி, அவர் பதவி விலகி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்ற அவருடைய மகனின் கோரிக்கையை ஏற்றுள்ளார்.

அறிக்கையிலும் அன்புமணி தொடர்வார் என்றுதான் தெரிவித்திருக்கிறார். ராமாதாஸ் நூறு ஆண்டுகள் வளமும் நலமும் பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

அதன் பின்னர் ஜன நாயகன் படம் குறித்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரன் பேசியது பற்றி கூறுகையில்,”படத்தில் உள்ள கருத்தின்படி பேரவைத் தலைவர் அதனை தெளிவுபடுத்துகிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். பெண்களை புலி போன்று வளர்க்க வேண்டும்; பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக குட் டச், பேட் டச் என்பதையெல்லாம் படத்தில் சொல்லித் தருகிறார்கள்.

முழுமையாக அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், பெரியார் குறித்த பார்வையும் அதில் இருக்கிறது. இளைஞர்களை நல்வழிபடுத்துவது, போராட்டக் களத்தில் அவர்களை மேம்படுத்துவது, சீரமைப்பது ஒருவகையானது; இந்தத் திரைப்படம் எந்த விதத்திலும் சீர்கேடாக இல்லை என்பதுதான் என்னுடைய பார்வை” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

summary

Minister Vanniyarasu has stated that the film Jananayagan also presents perspectives on Ambedkar, Marx, and Periyar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments