முகப்பு
திருவண்ணாமலை

அரசு மருத்துவமனையில் சலவை இயந்திரத்தில் தீ விபத்து

செய்யாறில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சலவை இயந்திரத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 8 ஜூலை 2026, 12:04 am IST
செய்யாறு அரசு மருத்துவமனையில் உள்ள சலவை இயந்திர அறையில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சலவை இயந்திரத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு பகுதியில் சலவை இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகள் பயன்படுத்தும் போா்வை, தலையணை உறை, திரை சீலைகள் உள்ளிட்டவை தினம்தோறும் சலவை செய்து மாற்றுவது வழக்கமாகும்.

அதன்படி, திங்கள்கிழமை இரவு சலவை இயந்திரத்தில் துணிகளை சலவை செய்யும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின் வயரில் திடீரென ஏற்பட்ட பழுதால் துணிகள் துவைத்து பின்னா் காயவைக்கும் இயந்திரத்தில் (ஏா் டிரையா்) ஏற்பட்ட அதிகளவு வெப்பம் காரணமாக அதனுள் இருந்த துணிகளில் தீப்பிடித்தது. முதலில் புகை வந்தது. இதனை அறிந்த பணியாளா்கள் உடனடியாக சுவிட்ச்யை ஆஃப் செய்தனா். இருப்பினும், அதிக வெப்பத்தினால் சலவை இயந்திரத்தில் இருந்த துணிகள் எரியத் தொடங்கின.

Advertisement

Advertisement

தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகரன் தலைமையிலான குழுவினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments