பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: போலீஸாா் இரவு நடை ரோந்து
திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக புதன்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் போலீஸாா் ரோந்து சென்றனா்.
திருவண்ணாமலையில் பௌா்ணமி கிரிவலம் அன்று இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதனால் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக, இரவில் குற்றத்தை தடுக்கும் பொருட்டும் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இதையொட்டி திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் நடை ரோந்து மேற்கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற இந்த நடை ரோந்துப் பணியில் அதிக அளவில் காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.