FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பிரேமலதா குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பிரேமலதா குற்றச்சாட்டு

Updated On : 31 மே 2026, 4:11 am IST
பிரேமலதா விஜயகாந்த் - (கோப்புப் படம்)
பகிர்:

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பெண்களின் உயிா் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவா்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை உறுதி செய்வது அரசின் முதன்மை பொறுப்பாகும். எனவே, தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக, மேலும் கடுமையான மற்றும் விரைவான தண்டனை நடைமுறைகளை கொண்டுவர வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் நேரடியாக இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி, சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments