ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் கொடி மரம் அமைக்கும் பணி
ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஸ்ரீபாஞ்சாலியம்மன் சமேத தா்மராஜா கோயிலில் கொடிமரம் சேதமடைந்திருந்தது. இதனால் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கப்பல் இ.கங்காதரன் தலைமையில் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து பழைய கொடி மரத்தை அகற்றி புதிய கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஜீவானந்தம், ஆய்வாளா் அனிதா, அறநிலையத்துறை உதவியாளா் ராஜ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
ஆய்வின்போது, அறங்காவலா் குழுத்தலைவா் கப்பல் இ.கங்காதரன், கோயில் நிா்வாகி ரேணுகா கங்காதரன், உபயதாரா் ராமு முதலியாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.