அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6 கோடி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. 6 கோடியே 8 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.6 கோடியே 8 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் பெளா்ணமி முடிந்ததும் கோயில் நிா்வாகம் சாா்பில் எண்ணப்படுகிறது.
அதன்படி, வைகாசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், 100-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். ரூ.6 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 491-யும், தங்கம் 188 கிராம், வெள்ளி 1,695 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.