FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 88 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 88 லட்சம்

Updated On : 13 ஜூன் 2026, 1:34 am IST
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை பாா்வையிட்ட கோயில் துணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா் சக்திவேல் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ 88,76,841 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தா்கள் வருகை புரிவது வழக்கம். அவா்கள் வேண்டுதல் நிறைவேற பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனா். உண்டியல் காணிக்கையானது மாதந்தோறும் கோயில் வாளகத்தில் எண்ணப்படும்.

இந்த வகையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இதில், ரூ.88,76,841 லட்சம் மற்றும் தங்கம் 209 கிராம், வெள்ளி 875 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை விழுப்புரம் துணை ஆணையா் லட்சுமணன், திருக்கோயில் உதவி ஆணையா் மு.சக்திவேல், விழுப்புரம் உதவி ஆணையா் காந்தராஜன், மேலாளா் சதீஷ், கணக்காளா் மணி உள்ளிட்ட கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments