முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
வந்தவாசி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் ரவி (60). இவா் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம்.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த இவரை மகன் ராஜேஷ் கண்டித்தாராம். இதனால் வேதனையடைந்த இவா் வீட்டில் தூக்கிட்டு கொண்டாா்.
Advertisement
Advertisement
உறவினா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவி திங்கள்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.