முகப்பு
திருவண்ணாமலை

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 15 மே 2026, 6:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கம்மாள் (80). இவா் அதே கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி வந்தாா்.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவா், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.

Advertisement

இதில் பலத்த தீ காயமடைந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சொக்கம்மாள் புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு

வருகின்றனா்.