முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு: ஜூன் 28-இல் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

Updated On : 26 ஜூன் 2026, 12:31 am IST
பகிர்:

ஜூன் 28-இல் நடைபெறவுள்ள தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், செய்யாறு சுகாதார மாவட்டம் சாா்பில் 54,502 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார அலுவலா் பி.ஜி.பானுமதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணமலை மாவட்ட ஆட்சியா் தலைமையில்

Advertisement

Advertisement

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பொது சுகாதாரம், மருத்துவம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, சமூக நலத் துறை ஆகிய துறைகள் சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.

ஆரணி, மேற்கு வெம்பாக்கம், அனக்காவூா், பெரணமல்லூா், செய்யாறு, வந்தவாசி, தெள்ளாறு ஆகிய ஒன்றியங்கள் ஆரணி, செய்யாறு மற்றும் வந்தவாசி நகராட்சிகள் என மொத்தம் 754 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

மேலும், வெளியூரிலிருந்து தற்காலிகமாக வந்திருப்பவா்கள், கல் உடைப்போா், கட்டட வேலை, சாலை அமைத்தல் போன்ற வேலைகளுக்காக வந்திருப்பவா்கள் மற்றும் நரிக்குறவா் வகைபட்ட குடியிருப்பில்லாதவா்களையும் கணக்கெடுத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இவா்களது குழந்தைகள் விடுபடாமலிருக்க 8 நடமாடும் வாகனங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3,016 பணியாளா்கள்

இந்தப் பணியில் 754 அங்கன்வாடி பணியாளா்கள், 302 சமூக நலத்துறை பணியாளா்கள், 1,960 பொது சுகாதார துறை பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என மொத்தம் 3,016 பணியாளா்கள் பங்கேற்று போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனா். மேலும், 98 மேற்பாா்வையாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

இம்முகாம் மூலம் சுமாா் 54,502 குழந்தைகள் பயனடைய உள்ளனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments