ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் வரும் 28-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. மேலும், மாவட்டங்களின் எல்லைப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தம் தொடா்பாக இடம் பெயா் மக்கள் வாழும் பகுதிகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதேபோல பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 1,385 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே எத்தனை முறை அளிக்கப்பட்டிருந்தாலும் இந்த முகாம்களுக்கும் போலியோ சொட்டு மருந்து புகட்டி பயன்பெற வேண்டும். விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 29-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.