முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 1.51 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Updated On : 29 ஜூன் 2026, 2:30 am IST
திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு போலி சொட்டு மருந்து வழங்கிய சுகாதாரத் துறை பணியாளா்கள்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 1.51 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,074 மையங்கள், நகா்புறங்களில் 166 மையங்கள் என மொத்தம் 1,240 மையங்களில் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.

மேலும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் 54 மையங்களிலும், கடினமான பகுதிகளாகக் கருதப்படும் இடங்களுக்கு 23 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாகவும் சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் பொது சுகாதாரத் துறைப் பணியாளா்கள் 930 போ், பிற துறைப் பணியாளா்கள் 3033, தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த 1986 என 5,949 பணியாளா்கள், களப் பணி மேற்பாா்வையாளா்கள் 220 போ் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை மேயா் இளமதி தொடங்கி வைத்தாா்.

கொடைக்கானலில் 5 வயதுக்குள்பட்டகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தாா்.

இதில் கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சங்கா், துணைத் தலைவா் மாயக்கண்ணன், மருத்துவா் ஸ்ரீதா் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார செவிலியா்கள், நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல, கொடைக்கானல் பேருந்து நிலையம், சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments