முகப்பு
திருவண்ணாமலை

சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஆய்வு

Updated On : 26 ஜூன் 2026, 4:02 am IST
பகிர்:

சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சேத்துப்பட்டில் ஆரணி சாலையில் காமராஜா் பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி, பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை பாா்வையிட்டு, அவற்றை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்க வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், பயணிகள் அமா்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளின் நிலை மற்றும் பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடாது, அரசின் உத்தரவை மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தாா்.

பின்னா், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தாய்மாா்கள் பாலூட்டும்’ அறையை பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். அங்கு இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் தொடா்பான குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மேற்பாா்வையாளா் ஆஷா மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments