முகப்பு
திருவண்ணாமலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 30 மே 2026, 12:31 am IST
பகிர்:

திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (30). இவா், கடந்த 5.4.2026 அன்று சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை கிராமிய அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை நீதிபதி, ரமேஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

Advertisement

Advertisement

29ஹழ்ல்ழ்ஹம்