விஐடி பல்கலை.யுடன், விர்டுசா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
டேட்டா அனலடிக்ஸ், பிசினஸ் இன்டலிஜென்ஸ், மெசின் லேனிங், பிக் டேட்டா ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில்
டேட்டா அனலடிக்ஸ், பிசினஸ் இன்டலிஜென்ஸ், மெசின் லேனிங், பிக் டேட்டா ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் வேலூர் விஐடி பல்கலைக்கழகமும், விர்டுசா நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
விஐடி பல்கலைக்கழகமும், விர்டுசா என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ஜாவா, டேட்டா சயின்ஸ் டெக்லானஜியில் திறன்மிகு மையம் ஒன்றை விஐடியில் தொடங்கியுள்ளது.
இந்த மையத்தின் மூலம் டேட்டா அனலடிக்ஸ், பிசினஸ் இன்டலிஜென்ஸ், மெசின் லேனிங், பிக் டேட்டா ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் விர்டுசா நிறுவனத்தின் குளோபல் துணைத் தலைவர் முரளி பத்மநாபன் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். அப்போது, விஐடி தகவல் தொழில்நுட்பம், பொறியியல் பள்ளி முதல்வர் அஸ்வானிகுமார் செருக்குரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.