நேதாஜி பிறந்த நாள் விழா
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி, வேலூரில் உள்ள அவரது சிலைக்கு இந்து முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி, வேலூரில் உள்ள அவரது சிலைக்கு இந்து முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர
போஸின் 122-ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர், சேண்பாக்கம் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு இந்து முன்னணியின் கோட்டத் தலைவர் மகேஷ் மாலை அணிவித்து, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைப்பின் கோட்டப் பொருளாளர் பாஸ்கர், மாவட்ட துணைத் தலைவர் டி.கே.டி.சீனிவாசன், இந்து முன்னணி ஒன்றிய நகர, பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம், சந்தப்பேட்டை பஜாரில் உள்ள நேதாஜி சிலைக்கு இந்து முன்னணியினர் மாலை அணிவித்தனர். இதில், அமைப்பின் நகர தலைவர் ஆனந்தன், தொழிற்சங்க நிர்வாகி ஞானம், இந்து இளைஞர் முன்னணி நகரத் தலைவர் சந்தீப், ஒன்றியச் செயலர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டையை அடுத்த வானாபாடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காஞ்சனகிரி அறக்கட்டளை நிறுவனர் கு.நடேசன் தலைமை வகித்தார்.
ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்று நேதாஜியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. இதில், சிப்காட் இந்து வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளித் தாளாளர் உதயகுமார், பள்ளி முதல்வர் கிருத்தி நிவேதிதா, வானாபாடி அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.