மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!
மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிடச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து...
மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிடச் சென்ற 500-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கர்நாடக எல்லையில் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக்கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சாவூரில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஓசூர் வந்தடைந்தனர்.
ஓசூரில் இருந்து கர்நாடகத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இஎஸ்ஐ மருத்துவமனை உள் வட்டச் சாலை அருகே தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பினர் இன்று (மே 31) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் களத்தில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கியக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
பச்சைத் துண்டு அணிந்து போராட்டம்: போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகள் தங்களின் அடையாளமான பச்சைத் துண்டுகளை அணிந்து, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயப் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது: "மழைப்பொழிவு இல்லாததாலும், போதிய நீர்வரத்து கிடைக்காததாலும் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு தீவிரமாக்கப்படும்.
அரசின் தரப்பிலிருந்து உரியப் பேச்சுவார்த்தை நடத்தி, சாதகமான முடிவு அறிவிக்கப்படும் வரை தங்களது அறவழிப் போராட்டம் தொடரும்” என்று விவசாயிகள் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More than 500 farmers who went to lay siege to the Mekedatu area were stopped at the Karnataka border on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.