ஒசூர்: கர்நாடகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கைது!
கர்நாடக மாநிலத்தை நோக்கிச் சென்ற நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒசூரில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
காவிரி தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி கர்நாடக மாநில எல்லையை நோக்கி பேரணி செய்ற தமிழக விவசாயிகளைத் தடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டு கிடைக்க வேண்டிய காவிரி பங்கீட்டுத் தண்ணீரைத் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் அமைப்புகள் இணைந்து மாநில எல்லையான ஒசூர் அருகே மூக்காண்டப்பள்ளி பகுதியில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதனடிப்படையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில், கர்நாடக அரசு அம்மாநில அணைகளில் இருக்கும் தமிழகத்திற்குரிய காவிரி உரிமைப் பங்கீட்டுத் தண்ணீரைத் திறந்துவிட மறுத்து வருகிறது.
இந்த அநீதியைக் கண்டிக்கும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம், இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு விவசாய சங்க அமைப்புகள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.
தமிழகத்தில் காவிரியைக் குடிநீர் ஆதாரமாகக் கொண்டு 22 மாவட்டங்கள் உள்ளன. காவிரிப் பாசன வசதி பெறும் விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, கர்நாடக சென்று அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்குரிய காவிரித் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி தான் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை நோக்கி முழக்கமிட்டவாறு பேரணியாகச் சென்றனர். அப்போது தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
The police intercepted and arrested Tamil Nadu farmers who were marching towards the Karnataka border to demand the release of Cauvery water.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.