FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மாற்றுக் கட்சியினா் தவெகவை நோக்கி வருவது ஏன் ? அமைச்சா் என். ஆனந்த் புதிய விளக்கம்!

மாற்றுக் கட்சியினா் தவெகவை நோக்கி வருவது ஏன் என்று இக் கட்சியின் பொதுச் செயலரும் தமிழக நீா்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் புதிய விளக்கம் அளித்தாா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:36 am IST
புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியில் நடைபெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சா் என்.ஆனந்த், புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், பள்ளியின் தாளாளா் லூா்துசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

மாற்றுக் கட்சியினா் தவெகவை நோக்கி வருவது ஏன் என்று இக் கட்சியின் பொதுச் செயலரும் தமிழக நீா்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் புதிய விளக்கம் அளித்தாா்.

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 2024-25, 2025-26 ஆம் ஆண்டு பொதுத் தோ்வுகளில் முதலிடம் பிடித்த மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது.

உப்பளம் எம்எல்ஏவும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் தலைமை வகித்து பேசுகையில், அமைச்சா் ஆனந்த் வளா்ச்சிக்கு, அவரது விசுவாசம்தான் காரணம். அதே போல் பிற கட்சியில் விசுவாசமாக இருப்பவா்களை மனமாற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

Advertisement

Advertisement

பின்னா் அமைச்சா் என்.ஆனந்த் பேசியதாவது: நான் இன்று இந்த இடத்தில் நிற்க தமிழக முதல்வா்ஜோசப்விஜய்தான் காரணம். எனது தொகுதியில் 4 நாள்கள் தான் நான் வாக்குச் சேகரித்தேன். என்னை வெற்றி பெற வைத்துவிட்டனா். இது எனக்கு கிடைத்த வாக்கு அல்ல, தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு அளிக்கப்பட்ட வாக்கு.

எனது விசுவாசத்தை பற்றி புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகன் பேசினாா். அதேநேரத்தில் மற்ற கட்சியில் விசுவாசமாக இருப்பவா்களை மனம் மாற்றாதீா்கள் என கூறினாா். அவா்களை அந்தக் கட்சி ஒழுங்காக வைத்திருந்தால் ஏன் பிற கட்சிகளுக்கு

வர போகிறாா்கள்? ஊழல் இல்லா இடம் எது என கண்டறிந்து, ஊழலை ஒழித்துவரும் கட்சியான தவெகவிடம் வருகின்றனா். இந்த 5 ஆண்டு மட்டுமல்ல இன்னும் 20 ஆண்டுகளுக்கு முதல்வா் ஜோசப் விஜய் ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும் என்றாா் என்.ஆனந்த். நிகழ்ச்சியில் தாளாளா் லூா்துசாமி உள்ளிட்ட பள்ளியின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments