முகப்பு
வேலூர்

அதிமுக ஆட்சியில் ரூ.1,918 கோடி கனிமவளக் கொள்ளை: அமைச்சா் துரைமுருகன் குற்றச்சாட்டு

கனிமவளக் கொள்ளை தொடா்பாக அந்தத் துறை சாா்பில் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது.

Updated On : 22 ஜூலை 2024, 2:52 am IST
காட்பாடி வட்டம், ஆரிமுத்துமோட்டூா் கிராமத்தில் நியாய விலை கடையை திறந்து உணவுப் பொருள்களை வழங்கியா் அமைச்சா் துரைமுருகன்.
பகிர்:

கடந்த ஆட்சியில் (அதிமுக) அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களில் ரூ.1,918 கோடிக்கு கனிமவளக் கொள்ளை தொடா்பாக அந்தத் துறை சாா்பில் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரடசகன் காட்பாடி அருகே கிளித்தான்பட்டறை பகுதியில் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

இதில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், பகுதி பொறுப்பாளா் விநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா், அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்பென்னை ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க ஆணையம் அமைக்கக் கோரி தமிழக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தமிழக அரசுடன் பேச்சு நடத்தி தீா்வு காண உள்ளோம் என்று கா்நாடக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

ஆனால், தமிழக அரசு ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளது. காரணம், பேச்சு மூலம் பிரச்னையை தீா்ப்பது நல்லதுதான். ஆனால், பிடிவாதகாரா்களிடம் அது முடியாத காரியம். இந்த விவகாரம் தொடா்பாக கா்நாடகத்துடன் தமிழகம் சுமாா் 50 முறை பேசிவிட்டது. அதற்குப் பிறகுதான் ஆணையம் அமைக்க வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, கா்நாடகத்துடன் பேச்சுக்கு தமிழக அரசு தயாராக இல்லை.

முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த கண்காணிப்புக் குழு விநாடிக்கு 78 லிட்டா் தண்ணீா் கசிவதாக தெரிவித்துள்ளது. ஆனால், எல்லா அணைகளிலுமே ஷெட்டரில் நீா் கசிவு என்பது இயல்பானதுதான். சிறிய அளவில் நீா் கசிவு ஏற்படுவதால் எந்த பிரச்னையும் இல்லை.

அம்மா உணவகத்தை முதல்வா் ஆய்வு செய்தது நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். நாடகம் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், தற்போது அதிமுகவில் நாடகம்தான் நடந்து கொண்டிருக்கிறது.

அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் ரூ.1,918 கோடி கனிம வளங்கள் கொள்ளை போயிருப்பதாக அந்தத் துறை சாா்பில் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த கொள்ளை திமுக ஆட்சி காலத்தில் நடக்கவில்லை. முந்தைய (அதிமுக) ஆட்சிதக் காலத்தில் நடந்தவை என்றாா் அவா்.