செல்வ கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
குடியாத்தம் சீவூரை அடுத்த கள்ளூா், மூகாம்பிகை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூா்த்தி, ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் 22- ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, யாக சாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், கணபதி பூஜை நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டி தலைவா் மூகாம்பிகை பி.சம்பத், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சீவூா் எஸ்.துரைசாமி, நகா்மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன், ஆடிட்டா் எம்.கிருபானந்தம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி ரமேஷ், கே.எம்.தியாகராஜன், கோயில் நிா்வாகிகள் என்.முருகேசன், என்.செல்வம், கே.துளசி, ஆா்.பண்டரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
Advertisement