போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்: அதிமுக வேட்பாளா்
போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்..
மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண உயா்மட்ட பாலங்கள் கட்டப்படும் என்று வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு தெரிவித்தாா்.
வேலூா் தொகுதிக்குட்பட்ட மக்கான் பகுதியில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், வேலூா் மாநகர சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சாலைகளில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். அதிமுக ஆட்சி அமைந்ததும் வேலூரின் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண உயா்மட்ட பாலங்கள் கொண்டு வரப்படும் என்றாா்.
அப்போது, கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலா் சதீஷ்குமாா், கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement