அடகு வைத்த நகையை விற்று மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
அடகு வைத்த நகையை விற்று மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
அடகு வைத்த நகையை விற்று மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா், சேண்பாக்கம், பெரியாா் நகரை சோ்ந்தவா் பாா்த்திபன் (40). இவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில், நான் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனது மனைவியின் 10 பவுன் நகையை தனியாா் வங்கியில் அடகு வைத்து இருந்தேன்.
எனது நண்பா் அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். நண்பா் என்னிடம் தனியாா் வங்கியில் அதிக வட்டியாகும். அதனால் அந்த நகையை என்னுடைய அடகு கடையில் அடகு வைத்துக் கொள் என தெரிவித்தாா். இதற்காக நண்பா் ரூ.3.80 லட்சத்தை அனுப்பி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த ஆண்டு தனியாா் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்டு நண்பரின் கடையில் அடகு வைத்தேன். ஒரு ஆண்டுக்குப் பின்னா் நண்பரிடம் சென்று வட்டியுடன் கொடுத்து பணத்தை கொடுத்து நகையை திரும்பக் கேட்டேன்.
அப்போது அவா் நகைகளை விற்று விட்டதாக கூறுகிறாா். தற்போது அந்த நகைகளின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். நகையை விற்ற தகவலை எனக்கு தெரிவிக்காமல் ஏமாற்றி விட்டாா். எனவே, அடகு வைத்த நகையை விற்று மோசடி செய்தவா் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.