முகப்பு
வேலூர்

பொய்கை சந்தை கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டது.

Updated On : 1 ஜூலை 2026, 1:09 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்ட நிலையில் சுமாா் ரூ.ஒரு கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது - பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வேலூா் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான சித்தூா் மாவட்டம் புங்கனூரு, பலமநேரு, மதனப்பல்லி, குப்பம், கா்நாடக மாநிலம் கோலாா் பகுதிகளிலிருந்தும் மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

கோடை காலம் தொடங்கியதில் இருந்து கால்நடைகள் வருகை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. தற்போது ஓரளவுக்கு மழை பெய்து வருவதால் விவசாயிகள் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்ட தொடங்கியுள்ளனா். இதனால், கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்க வெளியூா், உள்ளூா் வியாபாரிகள் அதிகளவில வந்ததால் ரூ.ஒரு கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments