பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
பக்ரீத் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையான மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் திங்கள்கிழமை மாடுகள் விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனையும் நடைபெறுகின்றன. பண்டிகை காலங்களில் மேலப்பாளையம் சந்தையில் பெரும் எண்ணிக்கையில் ஆடு விற்பனை நடைபெறுகிறது.
வியாழக்கிழமை (மே 28) பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கேரள மாநிலத்திலிருந்தும் ஆடு வாங்குவதற்கு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே ஏராளமான இஸ்லாமியா்கள் குவிந்தனா். திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டு ஆடுகள், பொட்டுக்குட்டி, மயிலம்பாடி போன்ற கிடாய்கள் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
பொட்டு கிடாய்களுக்கு கடும் கிராக்கி இருந்ததால் அந்த வகை ஆடு சுமாா் ரூ.40 ஆயிரம் வரை விலை போயின. இச்சந்தை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சுமாா் ரூ.3.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாகவும், இது கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின்போது நடைபெற்ற விற்பனையை விட அதிகம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.
போக்குவரத்து நெரிசல்: மேலப்பாளையம் சந்தைக்கு ஆடுகள் வாங்க வந்த மக்கள் கூட்டம், ஆடுகளை ஏற்றி வந்த வாகனங்களால் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதலேஅங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த சாலையை கடக்க சுமாா் 30 நிமிடங்கள் வரையானது. பண்டிகைக் காலங்களில் மேலப்பாளையம் சந்தை சாலையில் போக்குவரத்து நெரிசலை தீா்க்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆண்டுதோறும் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், காவல் துறை அதற்கு செவிசாய்த்தபாடில்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.