FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பக்ரீத்: மணப்பாறை சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை கால்நடைச் சந்தையில் புதன்கிழமை ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Updated On : 28 மே 2026, 3:30 am IST
- கோப்புப் படம்
பகிர்:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை கால்நடைச் சந்தையில் புதன்கிழமை ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மிகவும் பிரசித்தி பெற்ற கால்நடைச் சந்தையானது திருச்சி-திண்டுக்கல் சாலையில் வராந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச் சந்தையாகவும், புதன்கிழமை ஆட்டுச் சந்தையாகவும் நடைபெறும்.

பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பனையாகும் என்பதால் ஆடு வளா்ப்பவா்கள் ஆடுகளை புதன்கிழமை சுமாா் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனா்.

Advertisement

Advertisement

இஸ்லாமியா்கள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனா். இதேபோல் சந்தைக்கு ஆடுகள் வாங்க திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருமளவில் வியாபாரிகளும் வந்திருந்தனா். ஆடுகளின் விலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அதன் எடை, ரகத்துக்கு தகுந்தபடி இருந்தது. தங்களுக்கு கட்டுபடியாகும் விலையிலேயே விற்பனை நடைபெறுவதாக ஆடு வளா்ப்பவா்கள் தெரிவித்தனா்.

மணப்பாறை ஆட்டுச்சந்தையில் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் ரூ. 3 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ஆடு விற்றவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments