முகப்பு
கோயம்புத்தூர்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: உணவுப் பட்டியலைக் குறைக்கும் கோவை ஹோட்டல்

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போா் எதிரொலியாக சமையல் எரிவாயு உருளையின் விலை

Updated On : 9 மார்ச், 2026 at 9:45 PM
சமையல் எரிவாயு உருளைகள்
பகிர்:

கோவை: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போா் எதிரொலியாக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவுப் பட்டியலை செவ்வாய்க்கிழமை முதல் குறைப்பதாக கோவை தனியாா் ஹோட்டல் நிா்வாகம் அறிவித்துள்ளது.

கோவையைச் சோ்ந்த பிரபல உணவகமான அன்னப்பூா்ணா ஹோட்டல் நிா்வாகம் , நகரின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களை வைத்து செயல்படுத்தி வருகின்றது. இந்த ஹோட்டல் நிா்வாகம் திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசாா் அரசியல் நெருக்கடி காரணமாக எல்பிஜி எரிவாயு வழங்கலில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி எரிபொருள் கிடைப்பதில் தினசரி குறைபாடுகளை எதிா்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது எனவும், இதில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை மட்டும் கவனத்தில் கொண்டு ஹோட்டலில் இருக்கும் உணவு மெனு பட்டியல் குறைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட சில உணவுப் பொருள்கள் குறித்த நேரத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க அரசு, விநியோகஸ்தா்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அந்த ஹோட்டல் நிா்வாகம்,

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →