கொடைக்கானலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு
கொடைக்கானலில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருவதால் பொது மக்கள் சிரமப்படுகின்றனா். இதற்கு உரிய தீா்வு காண வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை
கொடைக்கானலில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருவதால் பொது மக்கள் சிரமப்படுகின்றனா். இதற்கு உரிய தீா்வு காண வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 45 நாள்கள் ஆன பிறகும் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை எனப் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே எரிவாயு உருளை விநியோக நிறுவனம் ஆய்வு செய்து குறிப்பிட்ட இடைவெளியில் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொது மக்கள் மேலும் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை விநியோகிப்பவா்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனா்.
Advertisement
Advertisement
இதனால், வீட்டு உபயோக எரிவாயு உருளைக்குப் பதிவு செய்து நீண்ட நாள்கள் ஆகியும் சமையல் எரிவாயு உருளைகள் கிடைப்பதில்லை.
கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினா்.