வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிக்கப்பட்டது பற்றி...
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.29 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) முதல் அமலுக்கு வருகிறது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவருவதால் அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை உயா்த்தி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன.
இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ. 928.5-இல் இருந்து ரூ. 957.5-ஆகவும், தில்லியில் ரூ. 913-இல் இருந்து ரூ. 942-ஆகவும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்கா-ஈரான் இடையே மேற்காசியாவில் ஏற்பட்ட போா் காரணமாக, உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் இடா்ப்பாடு ஏற்பட்டு, சா்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்தது. இதையடுத்து கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 60 அதிகரிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாத மத்தியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.50 வரையும், காா், ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு சுமாா் ரூ. 6 வரையும் உயா்த்தப்பட்டுள்ளது.
Price of domestic cooking gas increased by Rs. 29!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.