குண்டு வெடிப்புக் கைதியை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் லீக் தலைவர் கோரிக்கை
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அபுதாஹிரை உடல்நலக் குறைவு காரணமாக விடுதலை செய்ய வேண்டும் என்று, இந்திய
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அபுதாஹிரை உடல்நலக் குறைவு காரணமாக விடுதலை செய்ய வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
கோவை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குண்டு வெடிப்புக் கைதி அபுதாஹிரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எம்.அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், கோவை மத்தியச் சிறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் எவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை . அவர்களை விடுதலை செய்யக் கூடாது என வேறு எங்கிருந்தாவது அழுத்தம் வருகிறதா என்றும் தெரியவில்லை.
அதே வேளையில் குணப்படுத்த முடியாத நோயால் பல ஆண்டுகளாக அபுதாஹிர் உயிருக்குப் போராடி வருகிறார். எனவே, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை கருணை அடிப்படையில் காலம் தாழ்த்தாமல் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.