முகப்பு
கோயம்புத்தூர்

எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அதிமுகவினர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:31 am IST
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி கோவை ஹூசூர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை வரை அதிமுகவினர் மெளன ஊர்வலம் நடத்தினர். 
இதற்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கினார். 
இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அருண்குமார், அம்மன் அர்ச்சுணன்,  ஆறுக்குட்டி உள்ளிட்டோர் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் மேயர் ராஜ்குமார், முன்னாள் மண்டலத் தலைவர் ஆதிநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல், அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காரமடையில்....
எம்ஜிஆர் 31ஆவது நினைவு தினத்தையொட்டி மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
 பேரூராட்சி அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் தலைமை வகித்தார். காரமடை ஒன்றியச் செயலாளர் பி.டி.கந்தசாமி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆறுமுகசாமி வரவேற்றார்.  
இதில் ஒன்றியத் தலைவர் செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜகோபால்  மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
திம்பம்பாளையம் புதூரில் ஒன்றியச் செயலாளர் பி.டி.கந்தசாமி தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரூராட்சி செயலாளர் சேனாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  மேட்டுப்பாளையம் நகர அதிமுக சார்பில் காந்தி சிலையில் இருந்து கட்சியினர் அமைதி ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கு நகரச் செயலாளர் வான்மதி சேட் தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏ சுலோசனா, முன்னாள் தலைவர் வேணுகோபால், துணைத் தலைவர் ரமாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.


பெரியநாயக்கன்பாளையத்தில்...
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் அன்னதானம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரியநாயக்கன்பாளையம் நகரம், ஜோதிபுரம் கிளை அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் கோவனூர் துரைசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், நகரச் செயலாளர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும்,  வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடந்த அன்னதானத்தையும் அவர் தொடக்கி வைத்தார். இதில் பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வீரபாண்டி விஜயன், நகரச் செயலாளர்கள் குருந்தாசலம், ஆனந்தன், ராமதாஸ், டியூகாஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் கவிசரவணக்குமார், டி.ரவி, ராமகிருஷ்ணன், பூக்கடை ரவி, குணசேகரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments