விவசாயிகளுக்கு ஆதரவு: கிணத்துக்கடவு காய்கறி சந்தை மூடல்
விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும்
விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிணத்துக்கடவு காய்கறி சந்தை திங்கள்கிழமை மூடப்பட்டது.
தமிழகத்தில் இருந்து விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சுல்தான்பேட்டையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை திங்கள்கிழமை மூடப்பட்டது. இந்த சந்தையில் தினசரி சுமார் ரூ.40 லட்சத்துக்கும் மேல் வர்த்தகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.