முகப்பு
கோயம்புத்தூர்

சுவாசிப்பைப் போல வாசிப்பும் இருக்க வேண்டும்: கவிஞர் பெ.சிதம்பரநாதன்

மனிதனுக்கு சுவாசிப்பு எப்படி முக்கியமோ அதேபோல வசிப்புப் பழக்கமும் இருக்க வேண்டும் என்று கவிஞர் பெ.சிதம்பரநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Updated On : 23 ஜூலை 2018, 7:37 am IST
பகிர்:

மனிதனுக்கு சுவாசிப்பு எப்படி முக்கியமோ அதேபோல வசிப்புப் பழக்கமும் இருக்க வேண்டும் என்று கவிஞர் பெ.சிதம்பரநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
கோவை விஜயா பதிப்பகத்தின் சார்பில் வாசகர் திருவிழா புத்தகக் கண்காட்சி காந்திபுரம், கமலம் துரைசாமி அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரா.ஆனந்தக்குமார் எழுதிய "நான்காம் தடம் தேடலும், வீட்டு விடுதலையாதலும்' என்ற நாவலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கு.ராமசாமி பெற்றுக் கொண்டார். 
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து கவிஞர் பெ.சிதம்பரநாதன் பேசியதாவது: 
 மகாத்மாவுக்கு மேலானவர் என்றால் அப்துல் கலாமை கூறலாம். அதற்கு முக்கியக் காரணம் அவர் ஒரு விஞ்ஞானி. அதேசமயத்தில் ஏவுகணைகளை செய்யக்கூடிய விஞ்ஞானி. அவரது குடும்பத்தைச் சார்ந்த யாரும் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. அவரது ஆராய்ச்சி முழுக்க அரசுக்குச் சொந்தமானது. 
கலாம்  ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றபோது அங்கு போலியோவால் பாதித்த குழந்தைகளைச் சந்தித்துள்ளார். அப்போது அவரைப் பார்க்க குழந்தைகள் மிகவும் கனமான செயற்கைக் கால்களை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் தத்தளித்து வந்தனர். அதைப் பார்த்து அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இந்தக் குழந்தைகளுக்கு எடை குறைவான உறுதியான செயற்கைக் கால்களை தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். 
அதே போல் தயாரித்து அந்தக் குழந்தைகளுக்கு வழங்கினார். ஏவுகணை தயாரித்தபோது இருந்ததைக் காட்டிலும் செயற்கைக் கால்களை தயாரித்த போதுதான் அதிக மகிழ்ச்சியடைந்தார். இந்தியா வல்லரசாக இளைஞர்கள் கனவு காணவேண்டும் என்று சொன்னார். அவர் தனது வாழ்க்கையின் சாரமாகச் சொல்வது இந்தியா வல்லரசானால் தான் எதிரிகள் நம்மைக் கண்டு அஞ்சுவார்கள் என்றார். ஆகவே இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால் அத்தனைபேரும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இப்போது நாம் படிக்கும் புத்தகங்களில் நண்பர் யார், எதிரி யார் என அனைத்தும் வந்து விடுகிறது. அதேவேளையில், வாசிப்பு, அறிவு, சிந்திப்புக்கு விடுமுறை கொடுத்தால் இந்த நாட்டை ஜெயிப்பதற்கு மற்ற நாட்டவர்கள் வருவார்கள். கார்ல்மார்க்ஸ் இறக்கும் வரையில் சிந்தித்துக் கொண்டே இருந்தார். அவர் மரணமடையவில்லை அவருடைய சிந்தனையை நிறுத்திக் கொண்டார் என்று தான் சொல்வேன். மனிதன் இருக்கிறான் என்பதற்கு அடையாளமே அவன் சிந்திப்பதால்தான். ஆகவே சுவாசிப்பு எப்படி முக்கியமோ அதேபோல வாசிப்புப் பழக்கவும் இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம், கவிஞர்கள் சென்னிமலை தண்டபாணி, மணிசண்முகம், எழுத்தாளர் க.வை.பழனிசாமி,  நாவலாசிரியர் இரா.ஆனந்தக்குமார்,பேராசிரியர் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments