1,000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி 1,000 கர்ப்பிணிகளுக்கான
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி 1,000 கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு சீர்வரிசைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி அம்மா கலையரங்கத்தில் 1,000 கர்ப்பிணிகளுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டலத் தலைவரும், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளருமான கே.ஆர்.ஜெயராம் வரவேற்றார்.
இதையடுத்து, வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு விஜயலட்சுமி ஆறுக்குட்டி, வளையல் அணிவித்து சீர்வரிசைப் பொருள்கள் அடங்கிய தாம்பூழத் தட்டு வழங்கி துவக்கி வைத்தார். இதில் கர்ப்பிணிகளுக்கு வழங்கிய சீர்வரிசைத் தட்டில் பட்டுப்புடவை, மஞ்சள், குங்குமம், பழங்கள், இனிப்புகள், வளையல்கள் உள்ளிட்டவைகள் இடம்பெற்று இருந்தது.
மேலும் 7 வகையான உணவுகள் கர்ப்பிணிகளுக்கு பரிமாறப்பட்டது. இதில் வி.சி.ஆறுக்குட்டியின் மகள் அபிநயாவுக்கும் வளைகாப்பு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதிரன், பகுதிச் செயலாளர்கள் ராஜேந்திரன், உதயகுமார், மாவட்ட பிரதிநிதி குறிஞ்சிமலர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.