டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வடிவமைப்பு கண்டுபிடிப்பு மையம் துவக்கம்
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் வி.வி.டி.என். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின்
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் வி.வி.டி.என். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு கண்டுபிடிப்பு மையத் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, வி.வி.டி.என் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி செல்வமுத்துக்குமார் ஆகியோர் இதனை திறந்துவைத்தனர். இதற்கு, முதன்மை செயல் அலுவலர் புபேந்தர் சகரான் தலைமை வகித்தார். வி.வி.டி.என் நிறுவன பொதுமேலாளர் சுப்னேஷ் வரவேற்றார். பொறியியல் பிரிவு துணைத் தலைவர் முரளி ஜெயராமன், பொறியியல் பிரிவு துணைத் தலைவர் விவேக் பன்சால், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு, இந்தியாவின் மின்னணுத் துறை திறன் கவுன்சில் துணைத் தலைவர் சம்பத் பச்சுரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது:
வி.வி.டி.என் டெக்னாலஜிஸ் நிறுவனம் அசல் உற்பத்தி வடிவமைப்பாளராக தயாரிப்புத் துறையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் கற்றல் வடிவமைப்பு மையத்தை திங்கள்கிழமை துவக்கியுள்ளது. இதன் வாயிலாக மாணவர்கள் நெட்வொர்க்கிங், கேமரா மற்றும் விஷன் தானியங்கி, பாதுகாப்பு, தொழில்துறை ஆட்டோமேஷன், கிளவுட், எப்.பி.ஜி.ஏ., இன்டர்னெட் ஆப் திங்க்ஸ் போன்ற பிரிவுகள் குறித்து தெரிந்துகொள்ளமுடியும் என்றனர்.
நிகழ்ச்சியில் விவிடிஎன் நிறுவனத்தின் தயாரிப்பு தர உத்தரவாதப் பிரிவு துணைத் தலைவர் முரளி நாகராஜன், பொதுமேலாளர் தனசேகரன் மயில்சாமி, மூத்த இயக்குநர் ஜோதிகணேசன் மயில்சாமி, உதவி துணைத் தலைவர் பாலகுமார் சின்னுச்சாமி, மாணவர்கள் பங்கேற்றனர்.