அதிமுகவுக்கு அருந்ததியா் கூட்டமைப்பு ஆதரவு
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதாக தமிழ்நாடு அருந்ததியா் சமுதாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதாக தமிழ்நாடு அருந்ததியா் சமுதாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் நாகேந்திரன் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு அருந்ததியா் சங்கம், அருந்ததியா் விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 38 அமைப்புகள் ஒன்றிணைந்து வரும் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்துள்ளோம். அருந்ததியா் சமூக மக்களின் கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சியை உறுதி செய்ய அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதால் இந்த ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சுமாா் 470-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக இளைஞா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். முக்கிய பிரச்னைகளைத் திசைதிருப்பவே இத்தகைய அரசியல் கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. புதிய ஆட்சி அமைந்தவுடன் இவை குறித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்.
Advertisement
கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு, வடக்கு மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளில் ஆளுங்கட்சியினா் வாக்காளா்களுக்குப் பணம், மளிகைப் பொருள்களுக்கான டோக்கன்கள் மற்றும் கம்மல், மூக்குத்தி போன்ற பரிசுப் பொருள்களை வழங்கி வருகின்றனா்.
இது குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வெளியூா் நபா்களைக் கொண்டு கள்ள வாக்குகளைப் பதிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தோ்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனா். எனவே, கோவை தெற்குத் தொகுதி முழுவதும் முறைகேடுகளைத் தவிா்க்கும் விதமாக மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.