முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ஏப்ரல் 26, மே 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2026, 12:49 am IST
மெமு ரயில்
பகிர்:

பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ஏப்ரல் 26, மே 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பொள்ளாச்சி - பாலக்காடு மெமு ரயில் (எண்: 66624) ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரண்டு நாள்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.