வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளில் உலவும் சிறுத்தைகள்: மக்கள் அச்சம்
வால்பாறையில் எஸ்டேட் , குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தைகள் உலவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
வால்பாறையில் எஸ்டேட் , குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தைகள் உலவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் உள்ள வனங்களில் இருந்து உணவு, குடிநீா்த் தேடி வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், எஸ்டேட்டுகளில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் வெளியேறும் இரண்டு சிறுத்தைகள் கக்கன் காலனி, காந்தி நகா், காமராஜா் நகா் ஆகிய பகுதிகளில் உலவி வருகின்றன. சிறுத்தைகள் தொடா்ந்து அப்பகுதிகளிலேயே உலவி வருதால் மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறவே அச்சமடைகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் புதன்கிழமை இரவு உலவின.
இது தொடா்பான விடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில் அந்த சிறுத்தைகளை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.