பகுதி நேர பி.இ. படிப்பு மாணவா் சோ்க்கை: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் ஜூலை 12 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் ஜூலை 12 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் 8 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன. பட்டயப் படிப்பு முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டுள்ளவா்கள் இந்தப் படிப்புகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நடப்புக் கல்வியாண்டு முதல் பி.இ. படிப்பு 3 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 12 ஆம் தேதி கடைசி நாள்.
மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஜ்ஜ்ஜ்.ல்ற்க்ஷங்.ற்ய்ங்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரியை 0422 2590080, 94869 77757 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement