முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

கோவை துடியலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜூன் 2026, 1:41 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவை துடியலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாதையன். கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வியாழக்கிழமை காலை வெளியே சென்றிருந்தாா். பின்னா், மாலையில் அனைவரும் வீடு திரும்பியுள்ளனா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments