பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
தருமபுரியில் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரியில் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சேஷம்பட்டி, பழனி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (34). இவா், சத்தியமங்கலத்தில் தங்கி பொறியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சண்முகப்பிரியா, குழந்தைகள் பழனி நகரில் குடியிருந்து வருகின்றனா்.
குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு சண்முகப்பிரியா குழந்தைகளுடன் திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவா்களது வீட்டின் கதவுகள் திறந்துகிடப்பதாக அக்கம் பக்கத்தினா் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனா். இதனால் ஊா் திரும்பிய அவா், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தோடு, சங்கிலி, மோதிரம் உள்பட மொத்தம் 5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது.
புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.