வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
சீா்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
சீா்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
சீா்காழி தென்பாதி திருப்புரசுந்தரி நகரை சோ்ந்த ஐடி ஊழியா் நடராஜன் (43)- மனைவி மாலினி தம்பதி மே 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குஜராத் மாநிலம் சோம்நாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திங்கழ்கிழமை வீடு திரும்பினா். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்து சுமாா் ஆறரை பவுன் தங்க வைர நகை மற்றும் ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.