தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து
கோவையில் தகராறை விலக்கிவிட்ட இளைஞரைக் கத்தியால் குத்திய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவையில் தகராறை விலக்கிவிட்ட இளைஞரைக் கத்தியால் குத்திய கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மகன் விக்னேஷ் (29). தெலுங்குபாளையம் பெரியமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் புதன்கிழமை பங்கேற்றவிட்டு விக்னேஷ் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, ராஜேஸ்வரி நகா், வெள்ளை முனியப்பன் கோயில் அருகே சிலா் மது போதையில் அடிதடி தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த விக்னேஷ் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றாா். அப்போது, அதில் ஒரு தரப்பினா் விக்னேஷுடன் தகராறு செய்து, அவரைக் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் தொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.