தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: ஈரோடு மாணவிக்குப் பாராட்டு
தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த ஈரோடு பள்ளி மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த ஈரோடு பள்ளி மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் சார்பில் 24-ஆவது தேசிய அளவிலான ஜூனியர், சப் ஜூனியர், ரிதமிக் பிரிவு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 30, 31-ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
இதில், தமிழக அணிக்காக ஈரோடு கலைமகள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கம் ரூபிணி பங்கேற்று விளையாடினார். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தித் திரும்பிய மாணவியை பள்ளியின் தலைமையாசிரியர் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் நினைவுப் பரிசளித்து வாழ்த்தினர்.