இருசக்கரவாகனம் மோதி பெண் சாவு
பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்துச் சென்ற பெண் உயிரிழந்தார். அவரது பேத்தி காயமடைந்தார்.
பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்துச் சென்ற பெண் உயிரிழந்தார். அவரது பேத்தி காயமடைந்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி, அண்ணமார் கோயிலைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (50). இவரது மனைவி செல்லம்மாள் (45), மகன் பாலு (25), மகள் தெய்வானை (22), மருமகள் ஜோதிமணி (22), பேத்தி மாசானி (3). இவர்கள், ஊர் ஊராக சென்று பாட்டுப்பாடி பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெருந்துறை வார சந்தையில், ஈஸ்வரன், செல்லம்மாள் குடும்பத்துடன் பாட்டுப்பாடி ஞாயிற்றுக்கிழமை பிச்சை எடுத்தாக கூறப்படுகிறது.
பின்னர், மாலையில் ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் நோக்கிச் சாலையில் நடந்துச் சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், செல்லம்மாள், பேத்தி மாசானி ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்லம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.